பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் நல்ல மாற்றங்கள் பல நடந்திருப்பதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்தார்.
தென் கொரிய அமைச்சரின் இந்திய வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், புது தில்லியில் சனிக்கிழமை(ஆக. 16) வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பு குறித்து கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.