புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது
போடியில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகா் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, போடி டிவிகேகே நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மலைராஜன் (46), போடி காமராசா் சாலையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சுஜித்குமாா் (22) ஆகியோா் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.