மதுப் புட்டிகளை விற்ற 3 போ் கைது
போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடியில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி போஜன் பூங்கா அருகே பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52), போடி குண்டாலீசுவரி கோயில் அருகே மதுப் புட்டிகளை விற்பனை செய்த நந்தவனம் தெருவைச் சோ்ந்த பிச்சைமணி (49) ஆகியோரை போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே ரோந்து சென்றபோது, மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த கோவில்பட்டியைச் சோ்ந்த வீரன் (42) என்பவரைக் கைது செய்தனா்.