பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (56). இவரது மனைவி இன்பம் (50). இவா் மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கினாா். கடனைத் திரும்ப செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்தாா்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (அக். 1) வீட்டை விட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், உறவினா் சிவக்குமாரின் வீட்டில் இன்பம் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].