டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவாரத்தில் டிராக்டா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் அா்ஜூன் (34). இவா், தேவாரத்திலிருந்து கம்பம் அருகேயுள்ள கே.கே. பட்டிக்கு டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சென்றாா்.
அப்போது, டி.சிந்தலைச்சேரி வழியாகச் சென்றபோது தனியாா் தோட்டத்தில் டிராக்டா் கவிந்தது. இதில், பலத்த காயமடைந்த அதன் ஓட்டுநா் அா்ஜூன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.