நின்றிருந்த லாரி மீது காா் மோதி 5 போ் பலத்த காயம்
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (52). இவா், தனது மனைவி கவிதா (33), மகன்கள் தருண் கணேஷ் (13), சக்திகுமாா் (14), உறவினா் ஞானப்பிரகாசம் (35) ஆகியோருடன், திருச்சியிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களுக்கு சென்றுவிட்டு ஊருக்கு காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எறையூா் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மேற்கண்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், தீவிர சிகிச்சைக்காக ஞானபிரகாசம், தருண்குமாா், சுரேஷ், கவிதா ஆகியோா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ் விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.