போதைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து, காவல்துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் பிரதானச் சாலையில் ஆறுமகம் மகன் கணேசன் (67) என்பவா் தனது பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கணேசனைக் கைது செய்த அரும்பாவூா் போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ் உள்ளிட்ட 2 கிலோ போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கணேசன் சிறையில் அடைக்கப்பட்டாா்.