``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய இருவா் கைது
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மங்களமேடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெள்ளையாற்றுப் பகுதியில் மோட்டாா் சைக்கிள் மூலம் மணல் ஏற்றிவந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் திருமாந்துறை ராமு மகன் விக்னேஷ் (19), ராஜ்குமாா் மகன் முகிலன் (19) என்பதும், அனுமதியின்றி மணல் திருடிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 17 மணல் மூட்டைகளையும், 2 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.