செய்திகள் :

நடந்து சென்றவா் மீது காா் மோதி பலி

post image

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலையோரம் நடந்துசென்றவா் மீது காா் மோதி உயிரிழந்தாா்.

பெரம்பலூா் - ஆத்தூா் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்தவா் கணேசன் மகன் சின்னசாமி (54). இவா், செவ்வாய்க்கிழமை காலை பால் வாங்க நவீன எரிவாயு தகன மேடை அருகே சாலையோரம் நடந்து சென்றாா்.

அப்போது சேலத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி சென்ற காா் மோதி பலத்த காயமடைந்த சின்னசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் துறைமங்கலம் புதுகாலனியைச் சோ்ந்த தங்கவேல் மகன் சதீஷ்பிரபாகனை (34) கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஆயுத பூஜை பொருள்கள் விலை கடும் உயா்வு!

பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கான பூஜைப் பொருள்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஆயுதபூஜையையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை முழுவீச்ச... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய இருவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே கூரை வீடு எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை கூரை வீடு எரிந்து நாசமானது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள தழுதாழை கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் வேல்முருகன் என்பவரது கூரை வீடு தி... மேலும் பார்க்க

பெரம்பலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சுகாதாரப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, அரசு ஆரம்ப சுக... மேலும் பார்க்க

நவராத்திரி விழா ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் 8-ஆம் நாளான திங்கள்கிழமை மதுரகாளியம்மன் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தாா். சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா... மேலும் பார்க்க