பாளையத்தில் மின் மோட்டா்களின் வயா்கள் திருட்டு
பெரம்பலூா் அருகே 15-க்கும் மேற்பட்ட மின் மோட்டாா்களின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை தங்களது வயல்களுக்குச் சென்று பாா்த்தபோது, மின் மோட்டாா்களின் வயா்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
சுமாா், 15-க்கும் மேற்பட்ட வயல்களில் மின் இணைப்பைத் துண்டித்து மின்வயா்களை மா்ம நபா்கள் திருடிசென்றுள்ளனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.