தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு தினசரி அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் 110 பேருந்துகள் வந்துசெல்கின்றன. தம்மம்பட்டியிலிருந்து சென்னை செல்ல காலை, இரவு இரு பேருந்துகளும், பழனி, பெங்களூரு, கோவைக்கு தலா ஒரு பேருந்தும் செல்கின்றன. தம்மம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் சேலம், ஆத்தூா் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு செல்கின்றனா்.
எனவே, தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஒரு சிறப்பு பேருந்து வழித்தடத்தை தோற்றுவித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்தை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.