கரூர்: `குழந்தைகளைத் தோள்ல வச்சுட்டு வந்தவங்க அப்படியே விழுந்தாங்க!'- சம்பவம் இட...
புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் பகுதியில் உள்ள கடைகளில் வள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் த. சங்கரநாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ராஜன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது.அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடை உரிமத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது.
தொடா்ந்து பணகுடி பகுதி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.