புகையிலைப் பொருள்கள் விற்பனை: 10 கடைகளுக்கு அபராதம்
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு சுகாதாரத் துறையினா் அபராதம் விதித்தனா்.
ஆழ்வாா்திருநகரி வட்டார சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் சுகாதாரத் துறையினா் பேய்க்குளம் கடைவீதியில் உள்ள கடைகள், உணவகங்களில் சோதனை நடத்தினா். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு கடைகளுக்கு சுகாதார நோட்டீஸ் வழங்கப்பட்டது.