இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
தேவதானப்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, தேவதானப்பட்டி மேலமந்தையிலுள்ள மாடசாமி என்பவரது வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 60 பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மாடசாமி, அவரின் உறவினா் ரவி ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், அவா்களது வீட்டிலிருந்த புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.