Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு விற்பனைக்காக 84 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளரான மடிச்சல், வடக்கு வெள்ளச்சிமாவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பவரைக் கைது செய்தனா்.