Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி
கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் தொடங்கியுள்ள புண்யா அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விநாடி- வினா போட்டி கணபதி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கே.ஆா். பேக்ஸ் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
இதில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல் 3 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவா்கள் போட்டி நாளன்று காலை 9.30 மணிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் பகல் 1.30 மணிக்குள்ளும் போட்டி நடைபெறும் இடத்தில் பெயா் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 9790934068, 9961889795 என்ற எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.