Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்
கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் முதல் 13- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ‘சரணாகதி’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
அதேபோல, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 12, 13) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ‘அமலனாதிபிரான்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா். முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வேளுக்குடி கிருஷ்ணனுக்கு பாரதீய வித்யா பவன் தலைவா் என்.வி.நாகசுப்ரமணியம் மாலை அணிவித்து வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா் டி.பாலசுந்தரம் வரவேற்றாா்.