செய்திகள் :

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

post image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீது 50 சதவிகித வரியையும் டிரம்ப் விதித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு இம்மாத இறுதிக்குள் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வருகைதர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளுக்குச் செல்வதை பெரும்பாலும் புதின் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஷியா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புதினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் (Interfax) கூறியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் பெறப்படவில்லை.

மேலும், இம்மாத இறுதி நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு செல்லவுள்ளார். ஆகையால், அதற்கேற்றாற்போல தேதியும் மாற்றியமைக்கப்படலாம்.

ரஷியாவிடம் நீண்டகாலமாகவே கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா உள்பட மற்றைய நாடுகளுக்கும் டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. இருப்பினும், முழுமையாக நிறுத்தப்படவில்லை.

இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், தொடர்ந்து மேலும் 25 சதவிகிதம் வரி விதித்தார்.

டிரம்ப்பின் இந்த வரி நடவடிக்கையானது, இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில்தான், இந்தியாவின் உற்ற தோழனாக இருந்துவரும் ரஷியாவின் அதிபர் புதின் வருகைதருகிறார்.

Vladimir Putin to visit India in late August mid Trump tariff war

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீ... மேலும் பார்க்க

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட க... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில், முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி... மேலும் பார்க்க

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார... மேலும் பார்க்க