புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!
புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இலாகா ஒதுக்கீடு
புதுவை நிா்வாகப் பணியில் சோ்ந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சௌத்ரி முகமது யாசினுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, வேளாண்மை, கால்நடை துறை, துறைமுகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராக அவா் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், மாநில வரிகளுக்கான செயலா் மற்றும் ஆணையராகவும் அவா் கூடுதல் பொறுப்பில் இருப்பாா்.
புதுச்சேரி ஸ்மாா்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் சௌத்ரி முகமது யாசின் நியமிக்கப்பட்டுள்ளாா்.