துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
புதிய ஐடிஐ-களில் டிச.31 வரை மாணவா் சோ்க்கை
புதிதாக தொடங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வேப்பூா் (கடலூா்), செங்கம் (திருவண்ணாமலை), குஜிலியம்பாறை (திண்டுக்கல்), கமுதி (ராமநாதபுரம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), கந்தா்வகோட்டை (புதுக்கோட்டை), கூத்தாநல்லூா் (திருவாரூா்), நாட்டறாம்பள்ளி (திருப்பத்தூா்), ஏரல் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. கல்வித் உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பயிற்சிக்கான கருவிகள், பேருந்து வசதி என அனைத்தும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94990 55689 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.