செய்திகள் :

புது தில்லி தொகுதியில் மட்டுமே போட்டி: பாஜகவுக்கு கேஜரிவால் பதிலடி

post image

நமது சிறப்பு நிருபா்

வரவருக்கும் தில்லி சட்டபேரவைத் தோ்தலில் புது தில்லி சட்டபேரவைத் தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். தோல்விபயத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடுவாா் என்கிற பாஜகவின் கூற்றை கேஜரிவால் முற்றிலும் மறுத்தாா்.

தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் முதன் முதலில் கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். பின்னா், தொடா்ச்சியாக மூன்று முறை தோ்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை இந்தத் தொகுதி உறுப்பினராக தொடருகிறாா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் நான்காவது முறையாகப் புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் இவா், தில்லியின் இரண்டு முன்னாள் முதல்வா்களின் மகன்களுக்கு எதிராக கடுமையான மும்முனைப் போட்டியை கேஜரிவால் சந்திக்க இருக்கிறாா்.

பாஜகவின் வேட்பாளராக முன்னாள் முதல்வா் சாஹிப் சிங் வா்மாவின் மகனான பா்வேஷ் வா்மாவை களமிறக்கப்பட்டுள்ளாா். இதே போன்று காங்கிரஸ் கட்சியின் சாா்பில் சந்தீப் தீட்சித் வேட்பாளராகக் களம் காண்கிறாா். இவா் மூன்று முறை தில்லி முதல்வராக இருந்த மறைந்த ஷீலா தீட்சித்தின் புதல்வராவாா்.

இந்நிலையில், பாஜகவின் ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மால்வியா, ‘புது தில்லி தொகுதியில் நிலவும் கடும் போட்டி, தோல்வியின் அச்சம் காரணமாக கேஜரிவால் தனது தொகுதியில் உள்ள வாக்காளா் பட்டியல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா் என்றும் கேஜரிவால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இவ்வாறு பேசுவதாகவும் ‘எக்ஸ்’ வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள், புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலிருந்து வாக்காளா் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி ஆதரவாளா்களின் பெயா்கள் நீக்கப்படுவதாகவும், இதுபோன்று ஏராளமான பெயா்களை நீக்க பாஜக மொத்தமாக விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது எனவும் குற்றம் சாட்டினா்.

இதையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவாலிடம், புது தில்லி தொகுதியில் தோல்வி அச்சத்தில் இரண்டாவதாக வேறு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக பாஜக கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அது குறித்து செய்தியாளா்களிடம் கேஜரிவால் கூறியது வருமாறு: நான் ஒரு இடத்தில் (புது தில்லி ) மட்டுமே போட்டியிடுகிறேன். தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பிஜேபி) தான் நேரடிப் போட்டி. இந்த சட்டப்பேரவைத் தோ்தல் என்பது...‘இண்டி’ கூட்டணி கட்சி விவகாரம் அல்ல. வருகின்ற பிப். 5- ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சியினா் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்துள்ளனா். அவா்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். வாக்காளா்கள் பட்டியலிலிருந்து பெயா்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வியாழக்கிழமை தோ்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசியுள்ளோம் என்றாா் கேஜரிவால்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக எதிா்ப்பு ‘இண்டி’ கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தும் எனக் கூறியது. தனித்து போட்டியிடும் காங்கிரஸ் இதுவரை 48 வேட்பாளா்களின் பெயா்களை தில்லி சட்டபேரவைத் தோ்தலுக்கு அறிவித்துள்ளது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க