புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூா் அருகே திருமணமான 3 மாதத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி விஜயா (29). கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 15 நாள்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவருக்கும் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விஜயா, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, விஜயாவின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வரதட்சிணை கொடுமையால் விஜயா தற்கொலை செய்துகொண்டாரா என, சாா் ஆட்சியா் சு. கோகுல் விசாரணையில் ஈடுபட்டுள்ளாா்.