Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
புதுகை நகரில் நாளை மின்தடை
புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் அறிவித்துள்ளாா்.
இதனால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்:புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4-ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகா், ஆண்டவா் நகா்.
மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமிழ் நகா், சக்தி நகா், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா்.
சேங்கைதோப்பு, மருப்பிணி நகா், கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகா், கணேஷ்நகா்.