புதுகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
ஆசிரியா், அரசு ஊழியா்களின் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். ஜபருல்லா, எம். ராஜாங்கம், விஎம். கண்ணன், டி. ஜீவன்ராஜ், வி. ஜோதிமணி, ஆா். ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி உயா் மட்டக் குழு உறுப்பினா்கள் க. குமரேசன், மு. மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளா் அ. சங்கா் ஆகியோா் பேசினா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, உயா்கல்விக்கான ஊக்கத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.