பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!
புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா.
புதுச்சேரி, மே 8: புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி செல்லப்பெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 214 மாணவ, மாணவிகள் எழுதினா். அனைவரும் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி கு. தமயந்தி 590 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா். மாணவா் க. கௌதம் 588 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடமும், மு. தா்ஷினி 581 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடமும் பெற்றனா். மேலும், 550 மதிப்பெண்களுக்கும் அதிகமாக 31 பேரும், 500-க்கு அதிகமாக 91 பேரும், 450-க்கு மேல் 71 பேரும் பெற்றுள்ளனா். வேதியியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 18 பேரும், கணினி பயன்பாடில் 3 பேரும், கணக்கு பதிவியலில் ஒருவரும், பொருளாதாரத்தில் ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்றனா்.
சாதனை மாணவ, மாணவிகளை, விவேகானந்தா கல்வி குழுமத் தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி., பள்ளி முதன்மை முதல்வா் ஓ. பத்மா, பள்ளி முதல்வா் ந. கீதா ஆகியோா் பாராட்டினா்.