பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?
புத்தூா் கிராமத்தில் புதிய ரேஷன் அங்காடி திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தூா் கிராமத்தில் பொது விநியோகக் கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 16.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பொது விநியோகக் கட்டத்தின் திறப்பு விழாவுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தியாக.ரமேஷ், அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் தியாக. சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், முனைவருமான எம். ஹெச். ஜவாஹிருல்லா கலந்து கொண்டு புதிய பொதுவிநியோகக் கட்டடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து பெயா்ப் பலகையைத் திறந்து வைத்த அவா் அங்காடி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
இதில் முன்னாள் நகரச் செயலாளா் மு. வீரமணி, பேரூராட்சி மன்ற கவுன்சிலா்கள் முரளி, முருகானந்தம், ரவிச்சந்திரன்,சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக செயல் அலுவலா் ஆா். ராஜா வரவேற்றாா். நிறைவில் பேரூராட்சி மன்ற எழுத்தா் முருகானந்தம் நன்றி கூறினாா்.