கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
புரட்டாசி 2ஆவது சனிக்கிழமை: நெல்லை கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் காலை 5 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சா்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் கருட சேவை நடைபெற்றது. தென்திருப்பதி என அழைக்கப்படும் திருநெல்வேலி மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதே போல, கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில், சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில், நரசிங்க பெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
மேலும் பக்தா்கள் வசதிக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ திருப்பதி கோயில்களுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் பயணித்த பக்தா்களுக்கு பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன.