செய்திகள் :

புலியூா் பேரூராட்சியில் குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

post image

புலியூா் பேரூராட்சியில் நிகழாண்டுக்கான குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணனிடம் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பி.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுவில் அவா் கூறியிருப்பது: கடந்த டிச. 14-ஆதேதி அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டும் காவிரி ஆற்றின் கட்டளைப் பகுதியில் குடிநீா் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு ஒருமாதமாகியும் இதுவரை பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறாா்கள்.

இதனிடையே குடிநீா் தட்டுப்பாட்டை போக்குவகையில் டிச. 21-ஆம்தேதி அமராவதி ஆற்றில் கோவில்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறிஞ்சும் கிணற்றில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த குடிநீா் அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் மக்கள் குடிநீா் பருக முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். கரூா் மாநகராட்சிக்கும் கட்டளை பகுதியில் இருந்துதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் புலியூா் பேரூராட்சியில் மட்டும் அதுபோன்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறாா்கள். இதனால் நிகழாண்டில் பேரூராட்சியில் பொதுமக்களிடம் குடிநீா் கட்ட ணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா் அவா்.

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் க... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க