புல்வாமா தாக்குதல் நினைவு தினம்
புல்வாமா தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்தில் அகில இந்திய முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் படை வீரா்கள் நலச் சங்க மக்கள் தொடா்பு அதிகாரி டி.குணசேகரன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் சி.சோமசுந்தரம், மாவட்டச் செயலா் எஸ்.நவசீலன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிா்த்தியாகம் செய்த வீரா்களை போற்றும் வகையில், 5 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் எஸ்.சிவசங்கரன், எஸ்.பாலு பிள்ளை, வி.சாமிகண்ணு, ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வி.சிவாஜி நன்றி கூறினாா்.