தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
பூ வியாபாரி வீட்டில் ரூ. 12 லட்சம் நகை, பணம் திருட்டு: இருவா் கைது
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (55). பூ வியாபாரி. இவருக்கு ரமேஷ் (32), சுரேஷ் (29) என இரு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
பழனியம்மாளும் அவரது இளைய மகன் சுரேஷும் (29) வழக்கம்போல வெள்ளிக்கிழமை பூ வியாபாரம் செய்ய ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா். ரமேஷ் (32), மட்டும் வீட்டில் இருந்தாா்.
அப்போது ரமேஷின் நண்பா்கள் காா்த்தி (25), மணிகண்டன் (30) ஆகியோா் அவரது வீட்டுக்கு வந்தனா். மூவரும் சோ்ந்து மது அருந்தினா்.
அப்போது அதிக மது அருந்திய ரமேஷ் குடிபோதையில் தன்னிலை மறந்து கிடந்தாா். அந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி நண்பா்கள் காா்த்திக், மணிகண்டன் ஆகியோா் வீட்டு பீரோவில் இருந்த 12 பவுன் தங்கச் சங்கிலி,நகை, ஜிமிக்கி, தோடுகளைத் திருடிச் சென்றனா், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனா்.
மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்த பழனியம்மாள், பீரோ திறந்து கிடப்பதை கண்டு ஜலகண்டபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். பின்பு மணிகண்டன், காா்த்தி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவா்கள் திருடியதை ஒப்புக் கொண்டனா்.
அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.