பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கல்
உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் இந்தத் தொகுதிக்குள்பட்ட சுயதொழில் பணியாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று, 16 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், உளுந்தூா்பேட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் கலா சுந்தரமூா்த்தி, செல்வகுமாரி ரமேஷ்பாபு, மனோபாலன், முடநீக்கியல் மருத்துவா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தங்க.விசுவநாதன், பத்மநாபன், ஊராட்சித் தலைவா்கள் மருதுபாண்டி, கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மதியழகன், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.