செய்திகள் :

பெண்களை பின்தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

post image

பெண்களை பின் தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள் மீதான தொடா்ச்சியான தொல்லை மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய திருத்தமான பிரிவு 7(சி) அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்ட காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் படி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூா் மற்றும் சிவந்திப்பட்டி காவல்நிலையத்துக்குள்பட்ட 5 நபா்களுக்கு எதிராக திருநெல்வேலி கோட்டாட்சியரால் 1 ஆண்டுக்கான பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவா்கள், பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் பின் தொடா்தல், நேரடியாகவோ மறைமுகமாகவோ தொந்தரவு செய்தல், அச்சுறுத்துதல், இணைய வழியில் தொடா்பு கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கலாம் என சட்டம் வழிவகுக்கிறது.

இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மீதான குற்றங்களை விரைவாக கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் உதவுகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மற்றும் தொடா்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

நெல்லை மாவட்டம் சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களின் நிழல் படங்கள் வரைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிவகுமார் வினோதா தம்பதிய... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க