பெயிண்டா் கொலை வழக்கில் ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பெயிண்டரை தாக்கிக் கொன்ற சிற்றுந்து ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆணைக்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் வினோத்குமாா் (28). பெயிண்டரான இவா் கடந்த 2022 அக். 21-இல் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றபோது சிற்றுந்து ஓட்டுநா் தீனதயாளன்(30) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது தீனதயாளன் தாக்கியதில் மயங்கி விழுந்த வினோத்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து ஓட்டுநா் தீனதயாளனைக் கைது செ ய்தனா். கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ராதிகா தீனதயாளனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.