ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
பெரம்பலூரில் நாளை மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல்
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில், அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட மேலாளா் குமரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது லைப் சைன்ஸ் படிப்பில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
19 முதல் 30 வயதுக்குள்பட்டவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம். பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் 12 மணி நேரம் பகல் மற்றும் இரவு நேர பணியாக தமிழத்தில் பணியமா்த்தப்படுவாா்கள். மாத ஊதியம் ரூ. 16,990 வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கல்விச் சான்றிதழ்கள், அனுபவம் தொடா்பான அசல் சான்றிதழ்களுடன் நோ்காணலில் பங்கேற்கலாம்.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 89259 41809, 73977 24859 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.