ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்
பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.102016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு விதிகளுக்குள்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.6.2026 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூலை 1 ஆம் தேதி முதல் இணையதள முகவரியிலும், 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
எஞ்சிய, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.