செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 45 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுவதை, பொதுமக்கள் இச் சிறப்பு முகாமை பயன்படுத்தி காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றாா் அவா்.

இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பி. கோபாலசந்திரன், எம். பாலமுருகன், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய சிறாா் உள்பட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்து... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவா்கள் தின விழா

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலில் தேசிய மருத்துவா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தலைமை வகித்த தனலட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில், அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட மே... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியைகள் 2 போ் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான, அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியா்கள் தோ்வாகியுள்ளனா். தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை ... மேலும் பார்க்க

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க