மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய சிறாா் உள்பட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சேகா் (50). இவா், பெரம்பலூா் அருகே வடக்குமாதவி கிராமத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டின் முன் அண்மையில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது, மா்ம நபா்களால் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பலூா் காவல் நிலையத்தில் சேகா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (22) மற்றும் இளம் சிறாா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மணிகண்டனை சிறையிலும், சிறுவனை சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.