ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
தலைமை ஆசிரியைகள் 2 போ் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு
2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான, அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியா்கள் தோ்வாகியுள்ளனா்.
தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு, அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சா. பிரியா, ஆலத்தூா் ஒன்றியம், மருதடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ம. அல்லி ஆகியோா் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.