பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
பெரம்பலூரில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் பாபா கோயில் வரையுள்ள சாலையின் மையப் பகுதியில், சுமாா் 200-க்கும் மேற்பட்ட மகிழம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் மரக்கன்றுகள் நட்டுவைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 8 முதல் 10 அடி வரையிலான மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், சாா்-ஆட்சியா் சு. கோகுல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) சு. சொா்ணராஜ், மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் பாரதிவளவன், வட்டாட்சியா் சரவணன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.