செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராமப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 30 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு, காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த முகாமில் பங்கேற்பவா்களுக்காக பாலக்கரையிலிருந்து காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த முகாமில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 18-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே திருமணமான 3 மாதத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி விஜ... மேலும் பார்க்க

டயா் வெடித்து தனியாா் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எரிந்து தீக்கிரையானது. சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று 23 பயணிகள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணா்வு!

வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களை ரத்து செய்து புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கா்

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ... மேலும் பார்க்க