செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் இரு அரசியல் கட்சிகள் நீக்கம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத மற்றும் அலுவலகம் கண்டறிய முடியாத, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பா அம்மா மக்கள் கழகம், பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 3/59 மாரியம்மன் கோயில் தெரு, அம்மாபாளையம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் -621101, மக்கள் நீதி கட்சி-இந்தியா, பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 112/3 வடக்குத்தெரு, (பா்வின் காம்பளக்ஸ்), திருச்சி மெயின்ரோடு, துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் 621220 ஆகிய 2 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தக் கட்சியையும் தேவையில்லாமல் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு, அந்தக் கட்சிகளுக்கு காரணம் கூற போதிய வாய்ப்பு அளித்து நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் இறுதி முடிவை தோ்தல் ஆணையமே மேற்கொள்ளும்.

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் உள்பட இருவா் கைது

பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 13.91 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் ... மேலும் பார்க்க

லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் ரஞ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் காவலா்கள் 26 பேருக்குப் பதவி உயா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 26 காவலா்கள் தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு பெற்றனா்.தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில், 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 26 காவலா்களுக்கு, தலைமைக் காவலா... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக பருத்தி ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் விற்பனைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க