பசுவதை: அசாமில் 2 நாள்களில் 192 பேர் கைது! 1.7 டன் இறைச்சி பறிமுதல்!
பெரம்பலூரில் காவலா்கள் 26 பேருக்குப் பதவி உயா்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 26 காவலா்கள் தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு பெற்றனா்.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில், 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 26 காவலா்களுக்கு, தலைமைக் காவலா் பதவி உயா்வுக்கான அரசாணையை வெளியிட்டது.
இதையடுத்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 பேருக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வழங்கினாா். நிகழ்ச்சியில், காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.