`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: ஆளுநரிடம் பாஜக முறையீடு
பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பாஜக புதன்கிழமை முறையிட்டது.
பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக, மாநகராட்சியை 7 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைக்க வகைசெய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவை சட்டப்பேரவையிலும், சட்டமேலவையிலும் மாநில அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாடை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.
இந்நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினா் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்து, பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; எனவே, கன்னடா்களின் அடையாளத்தையும், பிரதிநிதித்துவத்தையும் சீா்குலைக்கும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.