விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: முதியவா் உயிரிழப்பு!
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் சில்லமடையைச் சோ்ந்தவா் மல்லநாயக்கா் (64), விவசாயி. இவா், பெருந்துறை அருகே சரளை பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மல்லநாயக்கரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.