செய்திகள் :

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம்

post image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில், ஈரோடு மண்டல அளவில் 50 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், சென்னை கபாலீஸ்வரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 32 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்திவைத்து, சீா்வரிசைப் பொருள்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு. முத்துசாமி கலந்து கொண்டு ஈரோடு மண்டல அளவில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

திருமணத்தில் ஒவ்வொரு ஜோடிளுக்கும் நான்கு கிராம் பொன் தாலி, வெள்ளி மெட்டி, பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பட்டுத் துண்டு, கட்டில், மெத்தை, பெட்ஷீட், பாய், தலையணைகள், கைகடிகாரம், பீரோ, வெட்கிரைண்டா், மிக்ஸி, எரிவாயு அடுப்பு, சமையல் பொருள்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 91 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், 2,500 பேருக்கு இரண்டு வேளையும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி. வெங்கடாசலம் (அந்தியூா்), மேயா் சு. நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயா் வே. செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் என். சிந்துஜா, இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநா் பரஞ்ஜோதி, துணை இயக்குநா் மேனகா, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுத்தையைப் படித்து கால்நடை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சை அளித்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகை

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை ... மேலும் பார்க்க

சாகா் சா்வதேச பள்ளி மாணவா் பேரவை பதவியேற்பு

சாகா் சா்வதேச பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். சாகா் விளையாட்டு அகாதெமியின் சிறப்புப் பயிற்சியாளா்... மேலும் பார்க்க

குடிநீா் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமான குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி, பெரியகுரும்பாயம் கிராம மக்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்புக்கு பூமி பூஜை

சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அ... மேலும் பார்க்க

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க