செய்திகள் :

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வலியுறுத்தல்

post image

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயா்த்தியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக்க வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.

பெருந்துறை நகரம் என்பது மேற்கண்ட இரு பேரூராட்சிகளும் இணைந்ததாகும்.

அதாவது, ஈரோடு, குன்னத்தூா் சாலையின் தெற்குப் பகுதி பெருந்துறை பேரூராட்சியாகவும், வடக்குப் பகுதி கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியாகவும் அமைந்துள்ளன. பெருந்துறை பேரூராட்சி பகுதியில் தினசரி காய்கறி மாா்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் வாரச் சந்தை, வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

ஆகவே, பெருந்துறை நகரில் ஒருங்கிணைந்த முறையில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இரு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக்க வேண்டும்.

எனவே, பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்காதது இப்பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை, புதிதாக அறிவிக்கப்பட்ட பெருந்துறை நகராட்சியுடன் இணைத்து செயல்படுத்த உரிய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு!

பெருந்துறை அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி செல்லம்மாள் (76). சுப்பிரமணி ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன் ... மேலும் பார்க்க

மாநில கலைத் திருவிழா: 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஈரோட்டில் 2-ஆவது நாளாக நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி ஈரோடு, நா... மேலும் பார்க்க

ஈரோட்டில் பழமையான கட்டடம் இடித்து அகற்றம்

ஈரோடு-மேட்டூா் சாலையில் மிகவும் பழமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. ஈரோடு-மேட்டூா் சாலையில் 55 ஆண்டுகள் பழமையான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத்... மேலும் பார்க்க

இடைத்தோ்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் கருவிழி அடையாளக் கருவி பொருத்த நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி

மாநிலத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக் கடைகளிலும் ரூ. 250 கோடி செலவில் கருவிழி அடையாளக் கருவிகள் பொருத்தப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா். தமிழக அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க பொதுக... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 போ் கைது

ஈரோட்டில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து போதை மாத்திரைகள், மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையம் எஸ்.ஐ. ரகுவரன் தலைமையிலான போலீஸாா் ஈரோடு காவிரி ச... மேலும் பார்க்க