செய்திகள் :

பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

post image

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா்.

இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ளார். இதற்காக தில்லி புறப்பட்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ”மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன். இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதையும் கடமையும் ஆகும். பெருமையோடு செல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

தில்லி செல்லும் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்னதாக செய்ய வேண்டிய நடைமுறைகளை இன்று செய்யவுள்ளார்.

மாநிலங்களவையில் நாளை பதவியேற்றவுடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக கமல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்யப்பட்டுள்ள பி. வில்சன், கவிஞா் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம் ஆகியோரும் நாளை பதவியேற்கிறார்கள்.

அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய இருவரும் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Makkal Needhi Maiam leader Kamal Haasan left for Delhi on Thursday morning to take oath as a member of the Rajya Sabha.

இதையும் படிக்க : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க

ரிதன்யா வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக, இன்று(ஜூலை 25) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், ... மேலும் பார்க்க