அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
பெல்ஜியத்துடன் உறவை முறித்துக்கொண்டது ருவாண்டா
கிகாலி: பெல்ஜியத்துடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.
காங்கோவில் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள எம்23 கிளா்ச்சியாளா்களுக்கு ருவாண்டா ஆதரவு அளிப்பதால் அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்திவருகின்றன. இதில் பெல்ஜியம் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ருவாண்டா குறித்து தவறான தகவல்களைப் பரப்பி நாட்டின் நிலைத்தன்மையைக் குலைக்க பெல்ஜியம் முயல்வதால் அந்த நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.