விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
`பேசவே கூடாது...' - மனைவி அதிகம் பேசுவதாக நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட கணவன்!
மத்தியப்பிரதேசத்தில், மனைவி அதிகமாகப் பேசுவதாகக் கூறி கணவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தளவில், கணவன் மனைவி இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். கணவர் போபாலில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்துவருகிறார். மனைவி அழகு நிலையம் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்தத் தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். குடும்ப வாழ்க்கையும் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. இருப்பினும், மனைவி அதிகமாகப் பேசுவதாக அவரின் கணவரும், கணவர் வீட்டாரும் உணர்ந்தனர். ஒரு கட்டத்தில் அவர் அப்படி பேசுவது அவர்களுக்குப் பிடிக்காமல் போனது. மேலும், கணவர் தனது மனைவியிடம் கேட்காமலேயே புகாரளித்ததால், இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டது. அதோடு, இதற்கு மேலும் முடியாதென்று இரண்டாண்டுகளுக்கு முன்பே கணவர் வீட்டிலிருந்து மனைவி கிளம்பிவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது மகளுடன்தான் அவர் வசித்துவருகிறார். தற்போது, அவரின் கணவர் விவாகரத்து கோரிய வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றத்தின் ஆலோசகர் ஷைல் அவஸ்தி, ``ஆண் தனது மனைவியுடன் வாழத் தயாராக இல்லை. பெண்ணோ தனது கணவருடன் உறவை முறித்துக்கொள்வதாக இல்லை. இதனால், 3 வயது மகள்தான் பாதிக்கப்படுகிறார். தங்களின் இரண்டாவது திருமணத்துக்குத் தடையாக இருக்கும் மகளைத் தங்களுடன் வைத்துக்கொள்ள இந்தத் தம்பதி விரும்பவில்லை.
ஆண் வீட்டாரைப் பொறுத்தவரை, தங்கள் வீட்டு மனைவிகளோ அல்லது மருமகள்களோ தங்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறுகின்றனர். தங்களையும், தங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் ஒருவார்த்தை கூட பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை இது பிரதிபலிக்கிறது." என்று வழக்கு தொடர்பாகக் கூறியிருக்கிறார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...