Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு கடைகளை வாடகைக்கு எடுத்து குளிா்பான விற்பனை செய்து வந்தாராம்.
இந்நிலையில், இவருக்கும் வியாழக்கிழமை கடைக்கு வந்த துலுக்கா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா்(26) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, செல்வகுமாா் அரிவாளால் வெட்டியதில் ரத்தினவேல் காா்த்திக் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.